search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி"

    ஈரான் நாட்டில் பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு 27 ராணுவ வீரர்கள் உயிரிழந்தது தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு பாகிஸ்தான் தூதருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. #IransummonsPakistan #Pakistanenvoyover #Iransuicide
    டெஹ்ரான்:

    இந்தியாவின் எல்லை மாநிலமான காஷ்மீரில் புல்வா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்-இ-முகமது என்ற பயங்கரவா அமைப்பினர் பொறுப்பெற்றனர்.
     
    இந்த நிலையில், ஈரானிலும் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தான் எல்லையில் ஈரானின் சிஸ்டான் பகுதி உள்ளது. அங்கு எல்லை பாதுகாப்புப் பணியில் ஈரான் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடந்த புதன்கிழமை இப்பகுதிக்குள் புகுந்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ராணுவ வீரர்கள் மீது அதிரடியாக தற்கொலைப்படை தாக்குதல் நடத்தினர். இதில் 27 ராணுவ வீரர்கள் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு ஜெய்ஷ் அல்-அடில் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

    இந்த அமைப்பும், இந்திய ராணுவ வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய ஜெய்ஸ்-இ- முகமது பயங்கரவாத அமைப்பும் பாகிஸ்தான் ராணுவத்தின் ஆதரவு பெற்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், இந்த தாக்குதல் தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு டெஹ்ரானில் உள்ள பாகிஸ்தான் தலைமை தூதர் ரபட் மசவ்ட்-க்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியுள்ளது.

    எங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்து ஜெய்ஷ் அல்-அடில் பயங்கரவாதிகள் நடத்திய இந்த கொடூரமான தாக்குதலுக்கு பாகிஸ்தான் அரசு உரிய நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் பஹ்ரம் கசேமி வலியுறுத்தியுள்ளார். #IransummonsPakistan #Pakistanenvoyover #Iransuicide
    மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஸரிப் இன்று சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். #SushmaSwaraj #Javad Zarif
    புதுடெல்லி:

    ஈராக், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியாவுக்கு பெட்ரோலிய கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் மூன்றாவது நாடாக ஈரான் உள்ளது. கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து 2018-ம் ஆண்டு ஜனவரி மாதம் வரை ஈரான் சுமார் 2 கோடி டன் கச்சா எண்ணெயை இந்தியாவுக்கு விற்பனை செய்துள்ளது.

    ஈரானுடன் எந்த நாடும் வர்த்தக தொடர்பும் வைத்து கொள்ளக்கூடாது என்று உலக நாடுகளுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் முன்னர் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் இந்தியா தொடர்ந்து ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வருகிறது. மேலும், அமெரிக்காவின் மிரட்டலுக்கு அடிபணியாமல் ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகத்தை நவீனப்படுத்தும் பணிகளிலும் இந்தியா உதவிகரமாக உள்ளது.



    இந்நிலையில், ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஸரிப் மூன்றுநாள் அரசுமுறை பயணமாக கடந்த திங்கட்கிழமை இந்தியா வந்தார். டெல்லியில் இன்று மத்திய மந்திரி சுஷ்மா சுவராஜை சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டும் விவகாரம் மற்றும் பல்வேறு பிராந்திய பிரச்சனைகள் தொடர்பாக இருவரும் தனியாக ஆலோசனை நடத்தினர். அதன்பின்னர் இரு நாட்டு அதிகாரிகளும் விரிவான விவாதம் மற்றும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். #SushmaSwaraj  #Javad Zarif

    ஈரானின் அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக ஆலோசனை நடத்த ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி இன்று சீனா நாட்டுக்கு சென்றடைந்தார். #IranNuclearDeal #IranFM #ChinaVisit

    பீஜிங்: 

    மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரான் கடந்த 2015-ம் ஆண்டு அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷியா, பிரான்ஸ், சீனா மற்றும் ஜெர்மனி ஆகிய வல்லரசு நாடுகளுடன் வரலாற்று சிறப்பு வாய்ந்த அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தம் ஒன்றை செய்துகொண்டது. 

    ஈரான் அணு ஆயுத திட்டங்களை செயல்படுத்துவதை முடிவுக்கு கொண்டுவர வேண்டும், அதற்கு பதிலாக அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதார தடைகளை மேற்கத்திய நாடுகள் படிப்படியாக விலக்கிக்கொள்ள வேண்டும் என்பது இந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இந்த ஒப்பந்தம் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஒபாமாவின் ஆட்சி காலத்தில் செய்யப்பட்டதாகும். 

    இதற்கிடையே, ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை விட்டு அமெரிக்கா வெளியேற முடிவு செய்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த 9-ம் தேதி அறிவித்தார். டிரம்ப்பின் இந்த முடிவுக்கு இஸ்ரேல், சவூதி அரேபியா உள்ளிட்ட அமெரிக்க பாசம் கொண்ட நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் ஈரான் கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    அதேவேளையில் முன்னாள் அதிபர் ஒபாமா மற்றும் ரஷியா, சிரியா உள்ளிட்ட சில நாடுகள் டிரம்ப் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இருப்பினும், இந்த ஒப்பந்தத்தில் இருந்து பின்வாங்க போவதில்லை என இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகியவை அறிவித்துள்ளன. எனவே பொருளாதார நெருக்கடிகளை சரிசெய்யும் முயற்சிகளில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

    அதன் தொடர்ச்சியாக அணு ஆயுத ஒப்பந்தம் குறித்து சீனாவுடன் ஆலோசனை செய்ய ஈரான் நாட்டின் வெளியுறவுத்துறை மந்திரி மொகமது ஜாவித் சாரிப் இன்று சீனா சென்றார். அதைத்தொடர்ந்து சீன வெளியுறவுத்துறை மந்திரி வாங் யியை சந்தித்து பேசினார். 



    அங்கு சென்றடைந்த அவர் பேசுகையில், ஈரான் எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து விவாதிப்போம். ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு முன்னரும், பின்னும் சீனாவுடன் நட்புறவில் இருந்து வருகிறோம். சீனாதான் ஈரானின் முதன்மை பொருளாதார பங்குதாரர். சீனா இப்போழுதும் எங்களுக்கு ஆதரவாக தான் இருக்கிறது, என அவர் கூறினார். #IranNuclearDeal #IranFM #ChinaVisit
    ×